/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இரவு பணியில் பெண்களை அமர்த்த கூடாது; தொழிலாளர் துறை உத்தரவு
/
இரவு பணியில் பெண்களை அமர்த்த கூடாது; தொழிலாளர் துறை உத்தரவு
இரவு பணியில் பெண்களை அமர்த்த கூடாது; தொழிலாளர் துறை உத்தரவு
இரவு பணியில் பெண்களை அமர்த்த கூடாது; தொழிலாளர் துறை உத்தரவு
ADDED : அக் 29, 2025 03:31 AM
புதுச்சேரி: தொழிற்சாலைகளில் இரவு நேரத்தில் பெண்களை பணியில் ஈடுபடுத்த கூடாது என தொழிலாளர் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து, தொழிலாளர் துறை செயலர் சுமித்தா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு;
1948ம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின்படி, கவர்னர் நிபந்தனைகளுக்குட்பட்டு, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளில் பெண்களின் வேலை நேர வரம்புகள் மாற்றப்பட்டுள்ளது.
இரவு 10:00 மணி முதல் காலை 5:00 மணி வரை எந்த தொழிற்சாலைகளிலும், பெண்கள் வேலை செய்ய கட்டாயப்படுத்தவோ அல்லது அனுமதிக்கவோ கூடாது. மேலும், தொழிற்சாலைகளில் பணி புரியும் பெண் தொழிலாளர்களுக்கு, இரவு 10:00 மணி வரை, அவர்களின் வீட்டுக்கு செல்ல வாகன வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
தொழிற்சாலையில், தினமும் வேலை நேரம் குறித்து, விதி முறைகளை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.