/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை விபத்தில் காயமடைந்த கூலி தொழிலாளி தற்கொலை
/
சாலை விபத்தில் காயமடைந்த கூலி தொழிலாளி தற்கொலை
ADDED : மே 29, 2025 11:32 PM
புதுச்சேரி: சாலை விபத்தில் காயமடைந்து, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தொழிலாளி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி, கல்மேடு பேட், நேதாஜி வீதியை சேர்ந்தவர் மணிகண்டன், 39; கூலி தொழிலாளி. இவருக்கு லெத்திசியா என்ற மனைவியும், 3 வயது மகன் உள்ளனர். லெத்திசியா தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
மணிகண்டனுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சாலை விபத்தில் கால் மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் இரும்பு ராடு வைக்கப்பட்டிருந்தது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் அடிக்கடி வலி ஏற்பட்டு வருவதாக மணிகண்டன் தெரிவித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 26ம் தேதி லெத்திசியா, மருத்துவ பரிசோதனைக்காக ஜிப்மர் சென்றுவிட்டு, பரிசோதனை முடிந்து திப்புராயபேட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று, தங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் லெத்திசியா தனது தந்தை பெனுவாவுடன் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு திறந்து இருந்துள்ளது.
உள்ளே சென்று பார்த்தபோது, மணிகண்டன் படுக்கை அறையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
தகவலறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.