சிறுமி பாலியல் பலாத்காரம் தொழிலாளி ‘போக்சோ’வில் கைது
சிறுமி பாலியல் பலாத்காரம் தொழிலாளி ‘போக்சோ’வில் கைது
UPDATED : நவ 05, 2026 11:59 PM
ADDED : நவ 04, 2026 09:25 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, காட்டேரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 27 வயது கூலித் தொழிலாளி, 13 வயது சிறுமியுடன் பழகி வந்தார். சில தினங்களுக்கு முன், சிறுமியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதாகக் கூறி, பைக்கில் வெளியே அழைத்துச் சென்றார்.
அங்கு, ஆள் நடமாட்டம் இல்லாத மறைவான இடத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.
