ADDED : ஏப் 13, 2026 04:03 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கைக்கிலப்பட்டு சஞ்சீவிராய ஆஞ்சநேய சுவாமி கோவிலில், லட்சதீப விழா நாளை நடக்கிறது.
கைக்கிலப்பட்டு கிராமத்தில் விஸ்வரூப சஞ்சீவிராய ஆஞ்சநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில், 35ம் ஆண்டு (சித்திரை மாத 1ம் தேதி) மகோற்சவ லட்சதீப விழா நாளை (14ம் தேதி) நடக்கிறது.
இதையொட்டி, அன்று காலை 7:30 மணிக்கு ஹோமம் லட்சார்ச்சனை, காலை 10:00 மணிக்கு சாந்தகாப்பு அலங்காரம் நடக்கிறது.
தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு தீபாராதனை மற்றும் குளக்கரை சுற்றியிலும், லட்ச தீப விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
இதேபோல், வாதா னுார் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலிலும் லட்சதீப விழா நாளை நடக்கிறது.
