சாந்த ஆஞ்சநேயர் கோவிலில் நாளை லட்ச தீபம் திருவிழா
சாந்த ஆஞ்சநேயர் கோவிலில் நாளை லட்ச தீபம் திருவிழா
ADDED : ஏப் 13, 2026 04:06 AM
பாகூர்: கன்னியக்கோவில் சாந்த ஆஞ்சநேயர் கோவிலில், 19ம் ஆண்டு மகா லட்ச தீபம் திருவிழா நாளை (14ம் தேதி) நடக்கிறது.
புதுச்சேரி - கடலுார் சாலை, கன்னியக்கோவில் பச்சை வாழியம்மன் கோவில் வளாகத்தில், சாந்த ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. இக்கோவிலில், 19ம் ஆண்டு மகா லட்ச தீப திருவிழா நாளை (14ம் தேதி) நடக்கிறது.
அதனையொட்டி, அன்று காலை 7:00 மணிக்கு சாந்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு மகா திருமஞ்சனம், தொடர்ந்து, காலை 10:30 மணிக்கு, முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து தட்டு வரிசை வீதியுலா, அதனை தொடர்ந்து, 12:00 மணிக்கு சீதா பிராட்டி சமேத ராமச்சந்திர மூர்த்தி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.மாலை, 6:00 மணிக்கு கோவில் வளாகம் முழுதும் 10,008 விளக்குகள் ஏற்றி லட்ச தீபவிழா விமர்மர்சையாக நடைபெற உள்ளது. இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி பெருமாள் (எ) மாறன் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
