தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடிப்பு

லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடிப்பு

லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடிப்பு


UPDATED : ஏப் 30, 2026 07:37 PM

ADDED : ஏப் 30, 2026 06:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 30, 2026 07:37 PM ADDED : ஏப் 30, 2026 06:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் தேர் திருவிழா ஏப்ரல் 30 ல் நடந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

புதுச்சேரி தவளக்குப்பம் அருகே தமிழக பகுதிக்குட்பட்ட சிங்கிரிகுடியில் லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 21ம் தேதி துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடந்து வந்தது. முக்கிய விழாவான தேரோட்டம் ஏப்ரல் 30 ல் நடந்தது.

தமிழக பகுதி கடலுார் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு, கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது.

பின்னர் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. (1ம் தேதி) மட்டையடி உற்சவம், காலை 10:00 மணிக்கு நாச்சியார் சம்வாதம், துவாதச ஆராதன திருமஞ்சனம் நடக்கிறது. இரவு 8:30 மணிக்கு இந்திர விமானத்தில் சுவாமி வீதியுலா மற்றும் புராணம் வாசித்தல் நடக்கிறது.

(2ம் தேதி) மாலை 6:00 மணிக்கு புஷ்ப யாகம், 3ம் தேதி இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், உள்புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us