தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடற்கரை சாலையில் விளக்கு ஏந்தி ஊர்வலம்

கடற்கரை சாலையில் விளக்கு ஏந்தி ஊர்வலம்

கடற்கரை சாலையில் விளக்கு ஏந்தி ஊர்வலம்


ADDED : ஜூலை 14, 2025 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2025 05:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பிரெஞ்சு தேசிய தினத்தையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் விளக்குள் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

பிரான்ஸ் நாட்டின் மன்னராட்சி முறையானது, கடந்த 1789ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி முடிவுக்கு வந்ததையடுத்து, அங்கு மக்களாட்சி உருவானது. அப்போது அங்கு மின்சாரம் இல்லாத சூழ்நிலையால், பொதுமக்கள் அனைவரும், தங்களது கைகளில் தீப்பந்தங்களை ஏந்தி புரட்சி செய்து, இந்த வெற்றியை பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிகழ்ச்சியை நினைவுக்கூறும் வகையில், பிரெஞ்சு தேசிய தினமானது,

பிரான்ஸ் நாட்டிலும், பிரெஞ்சு காலனி நாடுகளிலும் ஆண்டுதோறும் பிரெஞ்சு கொடியேற்றி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, பிரெஞ்சு தின விழா பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரியிலும் இன்று கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி, நேற்று இரவு பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் பொதுமக்கள் என, நூற்றுக்கணக்கானோர், விளக்குகளை ஏந்தியபடி கடற்கரை சாலையில் ஊர்வலமாக சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us