/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பெண்கள் பள்ளியில் லேப்டாப் வழங்கும் விழா
/
அரசு பெண்கள் பள்ளியில் லேப்டாப் வழங்கும் விழா
ADDED : பிப் 13, 2024 04:55 AM
புதுச்சேரி,: முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.
பள்ளி முதல்வர் எழில் கல்பனா வரவேற்றார். சம்பத் எம்.எல்.ஏ. வாழ்த்துரை வழங்கினார்.
கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கி பேசினார்.
விழாவில் 460 மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது.
பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி வாழ்த்துரை வழங்கினார்.
ரிச்சர்ட் எம்.எல்.ஏ., பள்ளி பொறுப்பாசிரியர் செம்பியன், தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் தெய்வகுமாரி, அன்புமொழி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
ஆசிரியை சிவபிரியா தொகுத்து வழங்கினார். மாணவி லீனாரோஸ் நன்றி கூறினார்.