/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அடுத்த ஆண்டு பையுடன் 'லேப்டாப்' அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
/
அடுத்த ஆண்டு பையுடன் 'லேப்டாப்' அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
அடுத்த ஆண்டு பையுடன் 'லேப்டாப்' அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
அடுத்த ஆண்டு பையுடன் 'லேப்டாப்' அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
UPDATED : ஜன 25, 2024 07:27 AM
ADDED : ஜன 25, 2024 05:22 AM
புதுச்சேரி : அடுத்த ஆண்டு பையுடன் லேப்டாப் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
கதிர்காமம் அரசு பெண்கள் பள்ளியில் நடந்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் விழாவில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:
கல்வித்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.900 கோடி ஒதுக்கினோம். 128 அரசு பள்ளிகளை சி.பி.எஸ்.இ., பள்ளிகளாக மாற்றியுள்ளோம். சி.பி.எஸ்.இ., பள்ளிகளாக மாற்ற விளையாட்டுதிடல், வளாகம், ஊழியர்கள் என பல விதிமுறை உள்ளது.
இதில் தளர்வு ஏற்படுத்தி மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றுள்ளோம். இது வரலாற்று நிகழ்வு. அதேபோல 137 ஸ்மார்ட் வகுப்புகள் அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறையை போக்க ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் 146, பட்டதாரி ஆசிரியர்கள் 300, விரிவுரையாளர்கள் 67, மொழி ஆசிரியர்கள் 45 ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். 2 மாதத்தில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி அமர்த்தப்படுவர்.
தற்போது பிளஸ் 2 படிக்கும் 8 ஆயிரத்து 140 மாணவர்களுக்கும், பிளஸ் 1 படிக்கும் 7 ஆயிரத்து 419 மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு பிளஸ் 1 படிக்கும் 7 ஆயிரத்து 444 லேப்டாப் வழங்கப்படும்.
பிப்., 15ம் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்பட்டு விடும். மாணவர்கள் கண்டிப்பாக தினசரி பள்ளிக்கு லேப்டாப் கொண்டுவர வேண்டும்.
மாணவர்களுக்கு லேப்டாப் வைத்துக்கொள்ள பை வழங்க வேண்டும் என முதல்வரிடம் கேட்டுள்ளேன். வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கித் தருவதாக முதல்வர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு பையுடன் லேப்டாப் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.