லாஸ்பேட்டை காங்., வேட்பாளர் சிவானந்தரபுரத்தில் ஓட்டு வேட்டை
லாஸ்பேட்டை காங்., வேட்பாளர் சிவானந்தரபுரத்தில் ஓட்டு வேட்டை
ADDED : ஏப் 06, 2026 11:38 PM

புதுச்சேரி: லாஸ்பேடை தொகுதி காங்., வேட்பாளர் வைத்தியநாதன் மற்றும் அவரது மனைவி ரமா ஆகியோர் சிவானந்தபுரம் பகுதியில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.
அங்கு அவர்களுக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி, எடுத்து மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். இதயா கல்லூரியில் இருந்து செல்லமுத்து மாரியம்மன் கோவில் வரை ஊர்வலமாக பேண்டு வாத்தியம், மேளதாளங்கள் முழங்க அழைத்து சென்றனர். . அப்பகுதி மக்கள் வைத்தியநாதன் அப்பகுதியில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் சிமெண்ட் சாலை அமைத்துக் கொடுத்ததற்கும், வடிகால் வாய்க்காலை அகலப்படுத்தியதற்கும், மழை நீர் தேங்காமல் பாதுகாத்ததற்கும், சாலை மற்றம் மின்விளக்கு மாற்றி தந்ததற்கு நன்றி தெரிவித்தனர். மேலும் தங்களது பகுதியில் அனைத்து நலத்திட்டங்களையும் செய்து கொடுத்து அமைதியான தொகுதியாக மாற்றியதற்கு வைத்தியநாதனுக்கு நன்றி தெரிவித்தனர்.
