லாஸ்பேட்டை காங்., வேட்பாளர் குமரன் நகரில் ஓட்டு சேகரிப்பு
லாஸ்பேட்டை காங்., வேட்பாளர் குமரன் நகரில் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 05, 2026 06:39 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதி காங்., வேட்பாளர் வைத்தியநாதன், குமரன் நகர் விரிவு, அசோக் நகர் முழுவதும் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.
லாஸ்பேட்டை தொகுதி காங்., வேட்பாளர் வைத்தியநாதன் தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு சென்று கை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகிறார். அந்த வகையில், நேற்று குமரன் நகர் விரிவு பகுதிகளில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அவருக்கு ஆர்த்தி எடுத்தும், மாலை அணவித்து மலர் துாவி வரவேற்பு அளித்தனர்.
ஓட்டு சேகரிப்பின் போது காங்., மாநில செயலாளர் நந்தா கலைவாணன், காங்., கமிட்டி உறுப்பினர் அய்யப்பன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
