/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்டாக்கில் விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு
/
சென்டாக்கில் விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு
சென்டாக்கில் விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு
சென்டாக்கில் விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு
ADDED : அக் 18, 2024 06:08 AM
புதுச்சேரி: சென்டாக்கில் இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் நாளை மதியம் 2:00 மணிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்டாக் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;
அரசு மற்றும் தனியார் கல்லுரிகளில் பி.டெக்., பி.எஸ்சி., நர்சிங், பிசியோதெரபி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகள், சட்டபடிப்புகள், கலை, அறிவியல் படிப்புகளுக்கு முன்பு விண்ணப்பிக்காத மாணவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் சென்டாக்கில் விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் சென்டாக் இணையதளம் மூலம் நாளை 19ம் தேதி மதியம் 2:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
வெளி மாநில மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வு அடிப்படையிலான படிப்புகளுக்கு 3வது கட்ட கலந்தாய்வுக்கு தகுதியான மாணவர்களின் பட்டியலும் சென்டாக் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. ஆட்சேபனை ஏதும் இருந்தால் இன்று காலை 11:00 மணிக்குள் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.