/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது: அமைச்சர் நமச்சிவாயம் 'பளீச்'

ADDED : அக் 13, 2025 06:28 AM
காரைக்கால்; புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது போல் மாயா தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குவதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று காரைக்காலில் நிருபர்களிடம் கூறியதாவது:
சட்டசபை தேர்தலை சந்திக்க தே.ஜ., கூட்டணி தயாராக உள்ளது. மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். எதிர்காலத்திலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
பல்கலை மாணவர்கள் போராட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும். புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. தொடர்ந்து மூன்று கொலைகள் நடந்ததும், எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது போல் மாய தோற்றத்தை உருவாக்குகின்றன. அது உண்மையல்ல.
அந்த கொலைகள் திட்டமிட்டது அல்லது. சொந்த பிரச்னை காரணமாக நடந்தது. இருப்பினும் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தேர்தல் வாக்குறுதிகள் 90 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாகவும், மீதமுள்ள 10 சதவீத வாக்குறுதிகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றார்.