/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொட்டும் மழையில் சட்ட நுழைவு தேர்வு
/
கொட்டும் மழையில் சட்ட நுழைவு தேர்வு
ADDED : டிச 02, 2024 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரியில் கொட்டும் மழையிலும் சட்ட நுழைவு தேர்வு நடந்தது.பெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு கடந்த 26ம் தேதி முதல் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லுாரிகள் முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. இருப்பினும் கொட்டும் மழைக்கு நடுவில் நேற்று காலாப்பட்டு அரசு சட்டக் கல்லுாரி மையத்தில் மதியம் 2:00 மணி முதல் மாலை 4 மணி வரை பொது சட்ட நுழைவுத் தேர்வான - கிளாட் நுழைவு தேர்வு நடந்தது.
இதில், புதுச்சேரி, விழுப்புரம், கடலுார் உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் 199 பேர் எழுதினர். 50 பேர் தேர்வு எழுத வரவில்லை.