/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வழக்கறிஞர்கள் சங்கத்தினர் முதல்வரிடம் மனு
/
வழக்கறிஞர்கள் சங்கத்தினர் முதல்வரிடம் மனு
ADDED : பிப் 06, 2025 07:07 AM

புதுச்சேரி; புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் நாராயணகுமார் மற்றும் நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். சீனியர் வக்கீல் பக்தவச்சலம், வக்கீல் ராம் முனுசாமி உடனிருந்தனர்.
மனுவில், புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் அலுவலக அறை கட்டடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு, கிடப்பில் உள்ள பணியினை விரைந்து முடிக்க வேண்டும். வழக்கறிஞர்கள் சேம நல நிதி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட ஒரு கோடி ரூபாயில் 20 லட்சம் வழங்கிய நிலையில், மீதியுள்ள தொகையை நடப்பு பட்ஜெட்டில் ஒதுக்கி கொடுக்க வேண்டும்.
இளம் வழக்கறிஞர்களுக்கான ஊக்கத் தொகை ரூ. 5,000 உயர்த்தி அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஊக்கத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. அதனை உடனே வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வழக்கறிஞர்களுக்கு சுகாதார காப்பீடு திட்டத்தை நடப்பு பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். நீதிமன்றத்தில் தற்போது உள்ள பெண் வழக்கறிஞர்கள் அறை போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால், அனைத்து வசதிகளுடன் கூடிய மாற்று அறை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.