/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய மதுபான ஆலைகளை அனுமதித்தால் புதுச்சேரி பாலைவனமாகிவிடும் தமிழகத்தோடு ஒப்பிட்டு வழக்கறிஞர் மனு
/
புதிய மதுபான ஆலைகளை அனுமதித்தால் புதுச்சேரி பாலைவனமாகிவிடும் தமிழகத்தோடு ஒப்பிட்டு வழக்கறிஞர் மனு
புதிய மதுபான ஆலைகளை அனுமதித்தால் புதுச்சேரி பாலைவனமாகிவிடும் தமிழகத்தோடு ஒப்பிட்டு வழக்கறிஞர் மனு
புதிய மதுபான ஆலைகளை அனுமதித்தால் புதுச்சேரி பாலைவனமாகிவிடும் தமிழகத்தோடு ஒப்பிட்டு வழக்கறிஞர் மனு
ADDED : ஏப் 18, 2025 04:17 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் தற்போது 5 தனியார் மதுபான தொழிற்சாலைகளும், ஒரு அரசு சாராய ஆலையும், ஒரு பீர் கம்பெனியும் உள்ளது. தற்போது மேலும் புதுச்சேரியில் 5 மற்றும் காரைக்காலில் ஒரு மதுபான தொழிற்சாலைகள் துவங்க உரிமம் அளிக்க எடுத்த முடிவு புதுச்சேரி சட்டசபையில் புயலை கிளப்பியது.வருவாயை பெருக்க புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கப்பட்டதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கப்பட்டதா இல்லையா என இன்று வரை புதிராக இருந்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள மதுபான தொழிற்சாலைகள் எண்ணிக்கை குறித்த அனுமதியை ஒப்பிட்டு வழக்கறிஞர் பாலமுருகன்,  புதுச்சேரி கவர்னருக்கு அளித்துள்ள மனு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனு தொடர்பாக வழக்கறிஞர் பாலமுருகனிடம் கேட்டபோது, மொத்தம் 1,30,058 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட 10 கோடி மக்கள் வாழும் தமிழகத்தில் மொத்தமே 11 மதுபான ஆலைகளும், 7 பீர் கம்பெனிகள் மட்டுமே உள்ளது. ஆனால் தமிழகத்தோடு ஒப்பிடுகையில் 0.22 சதவீதம் மட்டுமே பரப்பளவு கொண்டு 0.1 சதவீத மக்கள் மட்டுமே உள்ள புதுச்சேரி மாவட்டத்தில் அனைத்தும் தலைகீழாக உள்ளது.
சின்னஞ்சிறிய புதுச்சேரியில் ஐந்து தனியார் மதுபான ஆலைகளும், தலா ஒரு சாராயம் மற்றும் பீர் கம்பெனிகள் உள்ளது. இன்னும் புதிதாக 6 மதுபான ஆலைகளுக்கு அனுமதி அளித்தால் 13 மதுபான ஆலைகளாகிவிடும்.
தமிழ்நாடு மதுபான தொழிற்சாலைகள் அமைந்த மாவட்டங்களில் அனைத்திலும் தண்ணீர் பற்றாக்குறை தலைதுாக்கியுள்ளது. புதுச்சேரியில் மெல்ல மெல்ல தண்ணீர் பற்றாக்குறை துவங்கியுள்ளது. அனுமதியளித்தால் புதுச்சேரி பாலைவனமாகிவிடும். எனவே  கூடுதல் மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி தரக்கூடாது என்பதை வலியுறுத்தி பிரதமர், உள்துறை அமைச்சர், கவர்னருக்கு புகார் அனுப்பியுள்ளேன் என்றார்.

