/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தா விட்டால் போராட்டம் எதிர்கட்சித் தலைவர் சிவா எச்சரிக்கை

ADDED : ஜன 06, 2024 05:18 AM

புதுச்சேரி,: வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தை ஒரு வாரத்திற்குள் தரம் உயர்த்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபை எதிர்க்கட்சித்தலைவர் சிவா, நேற்று சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலுவை சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம், வில்லியனூர் மற்றும் கிராமப்புறங்களில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிரசவம், விபத்து போன்ற அவரச சிகிச்சைக்கு வருபவர்களுக்கு முதலுதவி அளித்து அவர்களை மேல் சிகிச்சைக்கு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பும் வகையில், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும்.
காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களில் கொரோனா காலங்களில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணியமர்த்த வேண்டும். போதிய மருந்தாளுநர்கள், ஆம்புலன்ஸ், ஓட்டுநர், மருந்துகள் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சுகாதாரத் துறை மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும் அவர், ஆயுஷ்மான் திட்டம் மக்களுக்கு பயன் அளிக்க வழி வகை செய்ய வேண்டும். முதல்வர் அறிவித்த இன்சூரன்ஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லை எனில், சுகாதாரத் துறையை கண்டித்து மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை தி.மு.க முன்னெடுக்கும்' என தெரிவித்தார்.