/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுத்தை நடமாட்டம்? வீடியோ வைரலால் பரபரப்பு
/
சிறுத்தை நடமாட்டம்? வீடியோ வைரலால் பரபரப்பு
ADDED : ஜூலை 31, 2025 04:02 AM
புதுச்சேரி: திருக்கனுார் அருகே சிறுத்தை நடமாடுவதாக சமூக வலைதளத்தில் வீடியோ வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
புதுச்சேரி, மாநிலம், திருக்கனுார் அடுத்த தமிழகப் பகுதியான சித்தலம்பட்டு வள்ளலார் கோவில் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், அப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு, சிறுத்தை நடமாடுவது போன்ற வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதைகண்ட அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளிவருவதை தவிர்த்து, வீட்டை பூட்டிக் கொண்டு அச்சத்துடன் உள்ளனர்.
இந்த வீடியோ தொடர்பாக திருக்கனுார் போலீசார் புதுச்சேரி மற்றும் தமிழக வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, அப்பகுதியில் நடமாடுவது சிறுத்தையா அல்லது வேறு ஏதேனும் விலங்கா என விழுப்புரம் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, சிறுத்தை நடமாட்டத்திற்கான தடயங்கள் ஏதும் இல்லை என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருக்கனுார் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக வைரலாகும் வீடியோவால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

