/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'தாயின் பெயரில் ஒரு மரம் வளர்ப்போம்' விழிப்புணர்வு ஊர்வலம்
/
'தாயின் பெயரில் ஒரு மரம் வளர்ப்போம்' விழிப்புணர்வு ஊர்வலம்
'தாயின் பெயரில் ஒரு மரம் வளர்ப்போம்' விழிப்புணர்வு ஊர்வலம்
'தாயின் பெயரில் ஒரு மரம் வளர்ப்போம்' விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜூலை 25, 2025 02:38 AM

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளியில் 'வன மகோத்சவ்' எனும் மத்திய அரசின் 'தாயின் பெயரில் ஒரு மரம் வளர்ப்போம்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் டாக்டர் கிறிஸ்டி ராஜ், பள்ளி முதல்வர் ஜெயந்திராணி ஆகியோர் தலைமை தாங்கினர்.
புதுச்சேரி வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு முதன்மை காவலர் டாக்டர் அருள்ராஜன் கலந்து கொண்டு, இயற்கை வளங்களை பாதுகாப்போம் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து, மாணவர்களுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். பின், மாணவர்கள் இயற்கை மற்றும் மரம் வளர்ப்போம் என்பதை வலியுறுத்தி ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
பள்ளி துணை முதல்வர் நன்றி கூறினார்.