/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'ஆண்டாள் உணர்த்திய வழியில் உணர்ந்து உய்வோம்': ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
/
'ஆண்டாள் உணர்த்திய வழியில் உணர்ந்து உய்வோம்': ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
'ஆண்டாள் உணர்த்திய வழியில் உணர்ந்து உய்வோம்': ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
'ஆண்டாள் உணர்த்திய வழியில் உணர்ந்து உய்வோம்': ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
ADDED : ஜன 01, 2024 05:48 AM
புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் திருப்பாவையின் 15ம் பாசுரம் குறித்து நேற்று உபன்யாசம் செய்ததாவது:
கோபியரை துயிலெ ழுப்பும் பத்து பாசுரங்களில் இது கடைசிப் பாசுரம். இந்த பாசுரம் பாகவத தாஸ்யம் எனும் அடியவர் சேவையின் மேன்மையைச் சொல்வதாக கேள்வியும் பதிலுமாக அமைந்து, உயர்ந்த வேதாந்தத் தத்துவத்தைச் சொல்லும் கோதையின் கீதையாக உள்ளது.
அடியாருக்கு அடியாராக இருப்பதில் உள்ள பெருஞ்சிறப்பை, நம்மாழ்வார் அவருக்கே உரித்தான பக்திப் பேருவகையோடு அருளியுள்ள பல பாசுரங்களில் ஒன்றில் அடியார் என்ற சொல்லை ஏழு முறை சொல்லி ஏழு பிறப்புகளிலும் வைணவ அடியாருக்கு தொண்டு செய்யும் பாக்கியத்தை வரமாக பரமனிடம் வேண்டுவதை மேற்கோளிட்டு இந்தப் பாசுரம் உணர்த்தும் உள்ளுரை.
நானே தான் ஆயிடுக என்ற சொற்களை இந்தப் பாசுரத்தில் மின்னும் வைரச் சொற்களாகக் கொள் ளலாம்.
விசிஷ்டாத்வைத தத்துவம் உணர்த்தும் வைணவ அடியார்களின் வைராக்யத்தையும், உள்ளத் தெளிவையும் உணர்த்தும் சொற்களாக இந்தச் சொற்களை அனுபவிக்கலாம்.
இந்தப் பாசுரத்தில் திருமங்கை ஆழ்வாரைத் துயிலெழுப்புவதாக திருமங்கையாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி என்று பூர்வாசார்யர்கள் அனுபவித்துள்ளனர்.
நமது புராணங்களும், இதிகாசங்ளும் நமக்கு பல்வேறு செய்திகளைச் சொல்லி நெறிப்படுத்துகின்றன.
உணர்ந்தோர் உய்கின்றனர். உணராதோர், பிறவிச் சுழலில் சிக்கித் தவிக்கின்றனர்.
கண்டவர் பேச்சுக்குக் காது கொடுக்காமல் கண்ணன் பேச்சு கேட்க வேண்டும்.
எனவே, மறக்காமல், மறைக்காமல் மறுக்காமல் தன் தவறை உணர்பவன் தான் உண்மையான பக்தன் என்றும், 'நானே தான் ஆயிடுக' என்ற பக்குவம் பெற வேண்டும் என்பதையும் ஆண்டாள் உணர்த்திய வழியில் உணர்ந்து உய்வோம்.
இவ்வாறு அவர் உயன்யாசம் செய்தார்.