/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விடுதலை நாள் விழா ஏற்பாடுகள்: அதிகாரிகள் ஆலோசனை
/
விடுதலை நாள் விழா ஏற்பாடுகள்: அதிகாரிகள் ஆலோசனை
ADDED : அக் 22, 2024 06:00 AM

புதுச்சேரி: புதுச்சேரியில், விடுதலை நாள் விழா முன்னேற்பாடுகள் தொடர்பாக, அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
புதுச்சேரியில் நவ., 1ம் தேதி விடுதலை நாள் விழா கொண்டாடப்படுகிறது. அது தொடர்பாக முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், தலைமை செயலக கருத்தரங்க கூடத்தில் நேற்று நடந்தது.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அரசு செயலர் கேசவன் தலைமை தாங்கினார். இயக்குனர் தமிழ்ச்செல்வன், போலீஸ், பொதுப்பணி துறை, தீயணைப்பு, நலவழித் துறை, சுற்றுலா, கலை பண்பாட்டுத்துறை, கல்வித்துறை, வேளாண், புதுச்சேரி நகராட்சி, விடுதலைப் போராட்ட வீரர் பிரிவு, முப்படை நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தலைவர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், புதுச்சேரி விடுதலை நாள் விழாவை சிறப்பாக நடத்த மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.