
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : பண்டசோழநல்லுார் அறம் நற்பணி இயக்கம் சார்பில், பொதுமக்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் பொது நுாலகம் மற்றும் இலவச பயிற்சி வகுப்புகள் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது.
இயக்க தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் ஆசிரியர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தார். துணை சபாநாயகர் ராஜவேலு நுாலகத்தினை திறந்து வைத்தார். பின் இலவச பயிற்சி வகுப்பிற்கான விண்ணப்பங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.
விழாவில்,விரிவுரையாளர் எழில்வேந்தன், காங்., மாநில செயலாளர் முத்துக்குமாரசாமி மற்றும் அறம் நற்பணி இயக்கம் நிர்வாகிகள், கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.