தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எல்.ஐ.சி., வேலைவாய்ப்பு முகாம் புதுச்சேரியில் இன்று நடக்கிறது

 எல்.ஐ.சி., வேலைவாய்ப்பு முகாம் புதுச்சேரியில் இன்று நடக்கிறது

 எல்.ஐ.சி., வேலைவாய்ப்பு முகாம் புதுச்சேரியில் இன்று நடக்கிறது


ADDED : ஜூலை 12, 2026 03:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2026 03:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: எல்.ஐ.சி.,யின் 70ம் ஆண்டு விழாவையொட்டி, இன்று (12ம் தேதி) உதவித் தொகையுடன் கூடிய சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

இதுகுறித்து, புதுச்சேரி எல்.ஐ.சி., அலுவலக செய்திக்குறிப்பு:

புதுச்சேரி இ.சி.ஆர்., கொக்கு பார்க் எதிரில் இந்தியன் வங்கி மாடியில் உள்ள எல்.ஐ.சி., கிளை அலுவலகத்தில் இன்று (12ம் தேதி) காலை 9:30 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, உதவித்தொகையுடன் கூடிய சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் டிகிரி படித்த 28வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம். தாங்கள் எந்த தொழில் செய்தாலும், முழுநேரமாகவும் அல்லது பகுதி நேரமாகவும் முகவர் பணி செய்யலாம். 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறலாம்.

முகாமில் கலந்து கொள்பவர்கள் 10 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்று, ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், 4 போட்டோ எடுத்து வரவும். மேலும், 9444218019, 8608613200 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us