தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தமிழகப் பகுதிக்கு கடத்த முயன்ற மதுபானங்கள் பறிமுதல் 

 தமிழகப் பகுதிக்கு கடத்த முயன்ற மதுபானங்கள் பறிமுதல் 

 தமிழகப் பகுதிக்கு கடத்த முயன்ற மதுபானங்கள் பறிமுதல் 


ADDED : மார் 23, 2026 08:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2026 08:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் பகுதியில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக பகுதிகளுக்கு கடத்த முயன்ற 19 லிட்டர் மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பட்டு, நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி, திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில், காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நேற்று காலை புதுச்சேரி எல்லைப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, சந்தை புதுக்குப்பம் வழியாக கையில் பையுடன் வந்த வாலிபர் ஒருவர், போலீசாரை கண்டவுடன் பையை சாலையிலேயே போட்டு தப்பி ஓடினார். இதையடுத்து, அந்த நபர் போட்டு சென்ற பையை போலீசார் சோதனை செய்தபோது, அதில் ரூ. 6 ஆயிரத்து 189 மதிப்பிலான 14.750 லிட்டர் பீர் மற்றும் 4.260 லிட்டர் பிராந்தி என மொத்தம் 19 லிட்டர் மது பாட்டில்கள் இருப்பதும், சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகப் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கடத்தி சென்றது தெரியவந்தது.

தொடர்ந்து, மதுபானங்களை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை கலால் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us