ADDED : செப் 11, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு வைத்திருந்த பிராந்தி பாட்டில்களை கலால்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரி கலால் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது, தட்டஞ்சாவடி, திலகர் நகர் விளையாட்டு மைதானத்தில் மதுபானம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து போலீசார் அங்கு சென்றனர். அப்போது அந்த மைதானத்தில் உள்ள ஒரு புதரில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு சாக்குப்பை கிடந்தது. அதில், ரூ. 6 ஆயிரம் மதிப்பிலான 24 புல் பிராந்தி பாட்டில்கள் இருந்தது. இதையடுத்து கலால் துறை போலீசார் அதனை பறிமுதல் செய்து, கலால் துறையிடம் ஒப்படைத்தனர்.
