/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டில்லி போன்று புதுச்சேரியிலும் மதுபான கொள்கை முறைகேடு வைத்திலிங்கம் எம்.பி., குற்றச்சாட்டு

ADDED : நவ 12, 2024 07:16 AM
புதுச்சேரி; டில்லி மதுபான கொள்கை முறைகேடு போல் புதுச்சேரியிலும் மதுபான முறைகேடு நடந்துள்ளது என வைத்திலிங்கம் எம்.பி., குற்றம்சாட்டினார்.
அவர் கூறியதாவது;
புதிய பஸ் நிலையத்திற்கு ராஜிவ் காந்தி பெயரை மாற்ற முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். பழைய பெயரில் இயங்க முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
எந்த ஆண்டும் ஊழல் இன்றி மருத்துவ இடங்கள் நிரப்புவது இல்லை. இந்தாண்டு என்.ஆர்.ஐ., இடங்கள் நிரப்புவதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் நிரம்பாத இடத்தை நிர்வாக ஒதுக்கீடாக மாற்றி நிரப்பியது மாணவர்கள் உரிமை பறிக்கும் செயல்.
காரைக்காலில் பார்வதீஸ்வரர் கோவில் நில முறைகேட்டில் அதிகாரிகள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். அரசியல் தலைவர்களை கைது செய்யவில்லை.
இந்த விவகாரத்தில் தொடர்புள்ள காரைக்கால் அமைச்சரை பதவி நீக்கம் செய்து, முழு விசாரணை நடத்த வேண்டும். திருநள்ளார் காங்., பிரமுகர் கைது செய்யப்பட்ட நில வழக்கு, கோவிலுக்கு சொந்தமானது கிடையாது.
ரெஸ்டோ பார்கள் அதிகாலை 5:00 மணி வரை இயங்குகிறது. புதுச்சேரிக்கு மனைவியுடன் சுற்றுலா வரும் கணவனை அடித்துவிரட்டிவிட்டு, மனைவியை பலாத்காரம் செய்கின்றனர். தம்பதிகள் விட்டால் போதும் என ஓடி விடுகின்றனர்.
இதுபோன்ற சம்பவங்களுக்கு ரெஸ்டோ பார்கள் தான் காரணம்.
ரெஸ்டோ பார்களால் இவ்வளவு வருமானம் வந்தது என முதல்வரால் கூற முடியாது. ஏனென்றால் கணக்கு கிடையாது. டில்லி மதுபான முறைகேடுகள் போல் புதுச்சேரியில் மதுபான முறைகேடு நடந்துள்ளது என கூறினார்.