UPDATED : அக் 13, 2026 07:32 PM
ADDED : அக் 13, 2026 07:18 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் கள்ளத்தனமாக மது விற்றவரை கலால் துறையினர் கைது செய்தனர்.
கலால்துறை தாசில்தார் ராஜேஷ்கண்ணா தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் செந்தாமரைக்கண்ணன், சிந்தன், சிறப்பு ஏட்டு பிரதாப் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, கலால் துறையின் உரிமமின்றி, லா டெராஸ் உணவகத்தில் மது பானங்கள் பரிமாறப்படுவதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து கலால் துறையினர் அங்கு சென்று சோதனை செய்த போது, 750 மி.லி., ஓல்டு மங்க் ரம், 750 மி.லி., பிளண்டர்ஸ் பிரைட் விஸ்கி என, மொத்தம் ரூ.1,600 மதிப்புள்ள 1.5 லிட்டர் மது பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட, முதலியார்பேட்டை கண்ணன் மகன் வெங்கிடராமன்,23, என்பவரை கைது செய்தனர்.
