ADDED : ஏப் 14, 2026 04:27 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூன்று நாட்கள் மூடப் படுகின்றன.
இதுகுறித்து, கலால் துறை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் செய்திக்குறிப்பு:
தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, வரும் 23ம் தேதியும், ஓட்டு எண்ணிக்கை மே 4ம் தேதியும் நடக்கிறது.
இதையொட்டி, தேர்தலை அமைதியான முறையில் நடத்தும் பொருட்டு, கலால் விதிகள், 1970ன் கீழ், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள சாராயம், கள்ளு கடைகள், மதுபானக்கூடங்கள் மற்றும் மது பரிமாற உரிமம் பெற்ற உணவகங்கள் ஆகியவை வரும் 21ம் தேதி காலை, 10:00 மணி முதல், வரும் 23ம் தேதி நள்ளிரவு, 12:00 மணி வரை மூடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
