தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கலை, அறிவியல் படிப்புகளுக்கு விருப்ப தேர்வு பட்டியல் வெளியீடு

கலை, அறிவியல் படிப்புகளுக்கு விருப்ப தேர்வு பட்டியல் வெளியீடு

கலை, அறிவியல் படிப்புகளுக்கு விருப்ப தேர்வு பட்டியல் வெளியீடு


UPDATED : அக் 29, 2026 11:12 PM

ADDED : அக் 29, 2026 11:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 11:12 PM ADDED : அக் 29, 2026 11:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்டாக் இளநிலை தொழிற்கல்வி மற்றும் கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கான மாப்-அப் 2 சுற்று விருப்ப தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்டாக் நீட் அல்லாத தொழிற்கல்வி மற்றும் கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கான, புதுப்பிக்கப்பட்ட மாப்-அப் 2 சுற்று விருப்பமுள்ள மாணவர்கள் பட்டியல் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான தகுதிப் பட்டியல் ஆகியவை மாணவர்களின் முறையீடுகள் மீது பரிசீலனை செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப்பட்டியல்கள் சென்டாக்கின் www.centacpuducherry.in என்ற இணைய முகவரில் பார்க்கலாம். ஏற்கனவே கல்லுாரிகளில் சேர்ந்து, மாப்-அப் 2 சுற்றுக்கான விருப்பத்தைச் சமர்ப்பிக்காத மாணவர்கள் தற்போதுள்ள படிப்பில் தொடர்வார்கள்.

அவர்கள் இந்த மாப்-அப் 2 விருப்பப் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள். மாப்-அப் 2 சுற்றுக்கு விருப்பம் தெரிவித்த மாணவர்கள் மட்டுமே இட ஒதுக்கீட்டுக்குப் பரிசீலிக்கப்படுவர்.

தங்களது பாட விருப்பங்களை காலியாக விட்டுள்ள மாணவர்களுக்கு சீட் ஒதுக்கப்படாது. மாணவர்கள் தங்களின் லாகின் டாஷ்போர்டில் உள்ள குறைதீர்க்கும் பகுதி மூலம் புகார்களைத் தெரிவிக்கலாம். மேலும் உதவிக்கு 0413-2655570 , 2655571 என்ற உதவி எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என, சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us