ADDED : மார் 02, 2026 03:57 AM

அ நிறம் | அளவு
திருக்கனுார்: கொடாத்துார், அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் கற்றல் தொடர்பான வாகனங்கள் மற்றும் சமூக உதவியாளர்கள் விழா நடந்தது.
தலைமையாசிரியர் ரூபஸ் தலைமை தாங்கினார். ஆசிரியர் உமாமகேஸ்வரி வரவேற்றார். விழாவில், சமுதாயம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தி அன்றாட வாழ்க்கையை எளிதாக்க உதவும் டாக்டர்கள், ஆசிரியர்கள், போலீசார் போன்று மாணவர்கள் உடை அணிந்து வந்து தனித்திறனை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து, அவர்களுக்கான வாகனங்கள், மருத்துவ உபகரணங்கள், சமுதாயம் தொடர்பான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பட்டதாரி ஆசிரியா் வள்ளி ஒருங்கிணைத்தார். பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
