ADDED : மார் 09, 2026 04:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில், பாவேந்தர் கலை மற்றும் இலக்கிய திங்கள் விழா பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு பாவலர் சங்கர் பானுமதி வரவேற்றார். கலைமாமணி பாரதி தலைமை தாங்கி, பெண்ணுரிமை பாவேந்தர் பாரதிதாசனும் என்ற தலைப்பில் பேசினார். சிறப்பு விருந்தினராக சாரதா கங்காதரன் கல்லுாரி இணை பேராசிரியர் ஹேமமாலதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ரமேஷ் பைரவி, பாவலர்கள் பொய்யாது ஏகாம்பரம், மதன், பிரமீனா மேரி, நள்ளி, கிருஷ்ணகுமார், சுசீலா உட்பட பலர் பலர் கலந்து கொண்டனர். ராஜேஷ் தொகுப்புரையாற்றினார். மகளிர் தின விழாவையொட்டி மகளிர்களுக்கு பல்வேறு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பாவலர் அருள்ஜோதி நன்றி கூறினார்.

