ADDED : பிப் 18, 2026 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: ரோட்டரி கிளப் ஆப் அரிக்கமேடு போர்ட் மற்றும் ஹோலிஸ்டிக் வெல்னஸ் கேர் சென்டர் ஆகியன சார்பில், கல்லீரல் பரிசோதனை முகாம், அரியாங்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.
பாஸ்கர் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்தார்.முகாமில், பொதுமக்கள், பங்கேற்று கல்லீரல் பரிசோதனை செய்து பயனடைந்தனர். நிகழ்ச்சியில், ரோட்டரி கிளப் ஆப் அரிக்கமேடு போர்ட் மண்டல செயலாளர் சதீஷ்குமார், செயலாளர் நவசக்தி, பொருளாளர் சதீஷ்குமார், இளவழகன், ராமச்சந்திரன், கலையரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

