காமராஜர் நகரில் ல.ஜ.க., தலைவர் ஜோஸ் சார்லஸ் ஓட்டு கேட்டு பிரசாரம்
காமராஜர் நகரில் ல.ஜ.க., தலைவர் ஜோஸ் சார்லஸ் ஓட்டு கேட்டு பிரசாரம்
ADDED : ஏப் 06, 2026 09:31 PM

புதுச்சேரி: தேசி ஜனநாயக கூட்டணியில் சார்பில் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிடும் ல.ஜ.க., தலைவர் ஜோஸ் சார்லஸ் நேற்று, தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், மக்களுடன் நேரடி தொடர்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், ஒவ்வொரு குடும்பத்தினரையும் சந்தித்து அவர்களின் பிரச்னைகள், தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்து வருகிறேன். தொகுதியில் குடிநீர், சாலை வசதி, வடிகால் அமைப்பு, தெரு விளக்குகள், மருத்துவ வசதிகள் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை தேவைகள் குறித்து கோரிக்கைகள் வைத்தனர். இவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
நான் வெற்றி பெற்ற பின், இந்த நம்பிக்கையை காக்கும் வகையில் இருமடங்கான சேவையை மக்களுக்கு அளிப்பேன், காமராஜ் நகர் தொகுதியை அடிப்படை வசதிகள் செய்து முன்னோடி தொகுதியாக மாற்றும் திட்டங்களையும் விரைவில் செயல்படுத்தப்படும் என்றார்.
