அ.தி.மு.க., பொது செயலாளருடன் ல.ஜ.க., தலைவர் சந்திப்பு
அ.தி.மு.க., பொது செயலாளருடன் ல.ஜ.க., தலைவர் சந்திப்பு
ADDED : ஏப் 05, 2026 06:42 PM

புதுச்சேரி: புதுச்சேரி வந்த அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியை, புதுச்சேரி ல.ஜ.க., தலைவர் ஜோஸ் சார்லஸ் சால்வை அணிவித்து, மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
சந்திப்பின்போது புதுச்சேரி அ.தி.மு.க., மாநில செயலாள் அன்பழகன், ரிச்சட் ஜான்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.
வேட்பாளர் ஜோஸ் சார்லஸ் கூறுகையில், காமராஜ் நகர் தொகுதி நாளுக்கு நாள் முக்கியத்துவம் பெற்று வருகிறது. தொகுதியில் நான் அனைத்து வீடுகளுக்கும் சென்று ஓட்டு கேட்கும் போது, அவர்களின் தேவைகளை நேரடியாக அறிந்து, அதற்கான தீர்வுகளை வழங்கும் நோக்கத்துடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறேன்.
காமராஜ் நகர் தொகுதி ஒரு பொருளாதார மையமாகவும் மாறும் பாதையில் உள்ளது. மக்கள் நம்பிக்கை, நேரடி தொடர்பு, மற்றும் திட்டமிட்ட வளர்ச்சி ஆகியவை ஒன்றிணைந்தால், காமராஜ் நகர் தொகுதி புதுச்சேரியின் முதன்மையான தொகுதியாக மாறுவது நிச்சயம்' என்றார்.
