காமராஜ் நகர் தொகுதியில் ல.ஜ.க., தலைவர் ஓட்டு வேட்டை
காமராஜ் நகர் தொகுதியில் ல.ஜ.க., தலைவர் ஓட்டு வேட்டை
ADDED : மார் 29, 2026 04:04 AM

புதுச்சேரி: காமராஜ் நகர் தொகுதியில் தே.ஜ., கூட்டணியில், ல.ஜ.க., சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வீதி வீதியாக சென்று ஓட்டு சேகரித்தார்.
வெங்கட்டா நகர் மற்றும் அண்ணமாலை நகர்களில் நே ற்று மாலை பிரசாரம் மேற்கொண்டபோது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், மாணவர்களிடம் 'ஏ.ஐ., தொழில்நுட்பம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனை நாமும் அறிந்து கொண்டு, அதற்கேற்ப நம்மை அடுத்த கட்டத்துக்கு தயார்படுத்தி கொள்ள வேண்டும் என, அறிவுறுத் தினார்.
பிரசாரத்தின்போது, அப்பகுதி மக்கள் துாய்மையான குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும், நல்ல குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுத்தனர். எங்கெல்லாம் தண்ணீரின் தரம் இல்லை என்பதை ஆராய்ந்து, நவீன சுத்திகரிப்பு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சரி செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதியளித்தார்.
பிரசாரத்தின் போது ரிச்சர்ட் எம்.எல்.ஏ., பொது செயலாளர்கள் துரைசாமி, சுரேஷ், பாபு, பிரபாகரன், மாநில செயலாளர் ரவி ராஜாராம், பரப்புரை பொதுச்செயலாளர் தாடி பாலாஜி, நெல்லித்தோப்பு தொகுதி நிர்வாகி பழனி, குமார் உடனிருந்தனர்.
