ADDED : அக் 16, 2024 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : அதிகமாக மது குடித்த சுமை துாக்கும் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
புதுச்சேரி, அரவிந்தர் வீதியில் உள்ள பிளாட்பாரத்தில் வசிப்பவர் கோபி 43, சுமை துாக்கும் தொழிலாளி. இவர் மனைவி, இரண்டு பிள்ளைகளுடன் 20 ஆண்டுகளாக அரவிந்தர் வீதியில் உள்ள பிளாட்பாரத்தில் தங்கியுள்ளார். குடிப்பழக்கம் உள்ள கோபி வேலைக்கு செல்லாமல் நேற்று அதிகமாக மது குடித்து மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி சுகுணா கொடுத்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.