/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1.56 கோடி கடன் உதவி
/
சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1.56 கோடி கடன் உதவி
ADDED : நவ 23, 2024 06:57 AM

அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, ரூ.1.56 கோடி கடன் உதவிக்கான காசோலை வழங்கப்பட்டது.
மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரக வளர்ச்சி துறை மற்றும் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், மணவெளி தொகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவியை சபாநாயகர் செல்வம் வழங்கினார்.
அதில், சமுதாய முதலீட்டு நிதி கடன், நலிவுற்றோர் நிதி கடன், பிரதமரின் உணவு பதப்படுத்துவோர் சிறப்பு கடன், வங்கி இணைப்பு கடன் மற்றும் துவக்க நிதி ஆகியவற்றிற்கு, 80 சுய உதவிகளுக்கு 1 கோடியே 56 லட்சம், கடன் உதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன், இணை வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியன், செயல் அதிகாரி கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.