/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உள்ளூர் கிரிக்கெட் மடுகரை அணி வெற்றி
/
உள்ளூர் கிரிக்கெட் மடுகரை அணி வெற்றி
ADDED : டிச 19, 2024 05:55 AM
நெட்டப்பாக்கம்: உள்ளூர் அளவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் மடுகரை என்.சி.சி., அணி வெற்றி பெற்றது.
மடுகரையில், புதுச்சேரி, தமிழக பகுதிகளை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடந்தது. இப்போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 12 அணிகள் பங்குபெற்றன.
இறுதி போட்டியில் மடுகரை என்.சி.சி. அணியும், கொங்கம்பட்டு அணியும் மோதின.
முதலில் ஆடிய கொங்கம்பட்டு அணி 8 ஓவர் முடிவில் 70 ரன்கள் குவித்தனர். தொடர்ந்து அடிய மடுகரை என்.சி.சி. அணி 7 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற மடுகரை என்.சி.சி., அணிக்கு கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. ஆட்ட நாயகன் விருதினை கோபாலகிருஷ்ணன் பெற்றார்.

