/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வட கிழக்கு பருவமழை எதிர்கொள்ள உள்ளாட்சித்துறை ஆலோசனை கூட்டம்
/
வட கிழக்கு பருவமழை எதிர்கொள்ள உள்ளாட்சித்துறை ஆலோசனை கூட்டம்
வட கிழக்கு பருவமழை எதிர்கொள்ள உள்ளாட்சித்துறை ஆலோசனை கூட்டம்
வட கிழக்கு பருவமழை எதிர்கொள்ள உள்ளாட்சித்துறை ஆலோசனை கூட்டம்
ADDED : அக் 15, 2024 06:22 AM

புதுச்சேரி: வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்களின் ஆலோசனை கூட்டம் உள்ளாட்சித்துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் சவுந்தர்ராஜன், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மழையின் போது தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுதல், மரங்கள் சாய்ந்தால் அவைகளை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தல், குடிநீரில் குளோரின் கலந்து நோய் தொற்றை தவிர்த்தல், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான கட்டிடங்களில் தங்க வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.