/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லோக்சபா தேர்தல் புறக்கணிப்பு? வியாபாரிகள் திடீர் போர்க்கொடி
/
லோக்சபா தேர்தல் புறக்கணிப்பு? வியாபாரிகள் திடீர் போர்க்கொடி
லோக்சபா தேர்தல் புறக்கணிப்பு? வியாபாரிகள் திடீர் போர்க்கொடி
லோக்சபா தேர்தல் புறக்கணிப்பு? வியாபாரிகள் திடீர் போர்க்கொடி
ADDED : மார் 05, 2024 04:58 AM
புதுச்சேரி: திட்டமிடல் இல்லாத வாய்க்கால் பணியால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே, மின் கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என லெனின் வீதி வியாபாரிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
புதுச்சேரி லெனின் வீதியில் நடைபெற்று வரும் திட்டமிடாத வாய்க் கால் பணியால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் கீர்த்தி மஹாலில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் புதுச்சேரி லெனின் வீதியில் உள்ள வியாபாரிகளும், தொழில்முனைவோர் மற்றும் அப்பகுதி பிரமுகர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்தனர்.ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் நோக்கவுரையாற்றினார்.
வாய்க்கால் கட்டும் பணியால் லெனின் வீதியில் உள்ள ஓட்டல்கள், மளிகை கடைகள், சைக்கிள் விற்பனை கடைகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.எனவே இப்பணி முடியும் வரை லெனின்வீதி வியாபாரிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
அனைத்திற்கும் இழப்பீடாக மின் கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்து வரி உள்ளிட்டவைகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது 50 சதவீதம் சலுகை தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை வலியுறுத்தி கலெக்டர், பொதுப்பணித்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து மனு அளிப்பது, இவற்றை நிறைவேற்றாவிட்டால் லோக்சபா தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டது.

