/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லோக்சபா தேர்தல் பணிகள் காங்., பார்வையாளர் தீவிரம்
/
லோக்சபா தேர்தல் பணிகள் காங்., பார்வையாளர் தீவிரம்
ADDED : ஜன 07, 2024 05:03 AM

கர்நாடகாவை சேர்ந்த தினேஷ் குண்டுராவ், புதுச்சேரி மாநிலத்துக்கான காங்., பார்வையாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். புதுச்சேரியில் அடிக்கடி முகாமிட்டு நிர்வாகிகளை அழைத்து பேசி, கட்சி பணிகளை தினேஷ் குண்டுராவ் முடுக்கி விட்டார்.இதற்கிடையில், கர்நாடகா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக பதவியேற்றார். இதையடுத்து, புதுச்சேரி மாநில காங்., பார்வையாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக புதிய பார்வையாளர் புதுச்சேரிக்கு நியமிக்கப்படவில்லை. தற்போது, அஜோய்குமார், புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கான பார்வையாளர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என, காங்., மேலிடம் அறிவித்துள்ளது.இந்நிலையில், அகில இந்திய காங்., கமிட்டியின் புதுச்சேரிக்கான ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் டில்லிக்கு சென்று அஜோய்குமாரை சந்தித்து பேசினார். இந்திரா நகர் தொகுதி காங்., பொறுப்பாளர் ராஜாகுமார் உடனிருந்தார்.
புதுச்சேரி அரசியல் நிலவரம், மாநிலத்தில் காங்., நிர்வாகிகளின் செயல்பாடு குறித்து விளக்கி கூறினார். அப்போது, நடக்க உள்ள லோக்சபா தேர்தல் பணிகள் குறித்தும், வெற்றி வாய்ப்பு குறித்தும் அஜோய்குமார் கேட்டறிந்தார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அஜோய்குமார் விரைவில் புதுச்சேரிக்கு வருவதற்கு திட்டமிட்டுள்ளார்.