/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லோக்சபா தேர்தல்: 4,551 ஓட்டுச்சாவடி அதிகாரிகள் தேர்வு
/
லோக்சபா தேர்தல்: 4,551 ஓட்டுச்சாவடி அதிகாரிகள் தேர்வு
லோக்சபா தேர்தல்: 4,551 ஓட்டுச்சாவடி அதிகாரிகள் தேர்வு
லோக்சபா தேர்தல்: 4,551 ஓட்டுச்சாவடி அதிகாரிகள் தேர்வு
ADDED : மார் 18, 2024 05:31 AM

புதுச்சேரி : லோக்சபா தேர்தலில் பணியாற்ற 4,551 ஓட்டுச்சாவடி அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் அடுத்த மாதம் 19 ம்தேதி நடக்க உள்ளது.புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள 733 ஓட்டுசாவடிகளில் ஓட்டுபதிவு நடக்க உள்ளது.இந்த ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிவதற்காக மாவட்டத் தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், முன்னிலையில் முதற்கட்ட தற்செயல் கலப்பு முறையில் 4,551 ஓட்டுச்சாவடி அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்கான பணி ஆணை அவரவர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் 8 உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் கீழ் 18 மையங்களில் வரும் 22 மற்றும் 24ம் ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது.
அனைத்து ஓட்டுச்சாவடி அதிகாரிகளும் பயிற்சி வகுப்பில் தவறாது கலந்துகொள்வது கட்டாயமாகும். தவறுபவர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் சட்டப்பூர்வமான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியின்போது, துணை மாவட்ட தேர்தல் அதிகாரிவினயராஜ் மற்றும் நோடல் அதிகாரி முத்துமீனா ஆகியோர் உடனிருந்தனர்.

