/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'அரசுப்பள்ளி லட்சணத்தை பாருங்கள்' ; வீடியோவில் எம்.எல்.ஏ., குமுறல்
/
'அரசுப்பள்ளி லட்சணத்தை பாருங்கள்' ; வீடியோவில் எம்.எல்.ஏ., குமுறல்
'அரசுப்பள்ளி லட்சணத்தை பாருங்கள்' ; வீடியோவில் எம்.எல்.ஏ., குமுறல்
'அரசுப்பள்ளி லட்சணத்தை பாருங்கள்' ; வீடியோவில் எம்.எல்.ஏ., குமுறல்
ADDED : நவ 13, 2024 09:00 PM
புதுச்சேரி; மழையால் கடும் பாதிப்பிற்குள்ளாகி வரும், அரசு பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்தாமல், கல்வித்துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., குற்றம் சாட்டி உள்ளார்.
முத்தியால்பேட்டை, சோலை நகர் பகுதியில், அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப் பள்ளி கட்டடத்தில் விரிசல் உள்ளிட்ட காரணங்களால், நேற்று வகுப்பறைகளில் மழைநீர் உட்புகுந்தது. இந்நிலையில் அங்கு வந்த தொகுதி எம்.எல்.ஏ., பிரகாஷ்குமார், பள்ளியை பார்வையிட்டு வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
அதில் அவர் பேசியதாவது:
இரு ஆண்டுகளாக, இப்பள்ளியின் மேம்பாட்டு பணிகள் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன். அதற்கு யாரும் செவி சாய்க்கவில்லை. பள்ளியின் லட்சணத்தை பார்த்தாலே, இது உங்களுக்கு தெரியும்.
பள்ளி முழுதும் மழைநீர் உள்ளது. எத்தனையோ ஆய்வுக்கூட்டங்களை நடத்தி விட்டேன். எத்தனை நாட்களுக்கு தான் அதிகாரிகள் திட்ட மதிப்பீட்டை தயாரிப்பதாக சொல்லி, காலம் கடத்துவார்களோ தெரியவில்லை.
பள்ளியில் குழந்தைகள் பாதிக்கின்றனர். ஆனால் அதிகாரிகள் ஏ.சி., அறையில் நன்றாகவே இருக்கின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

