/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிலில் நஷ்டம் கான்ட்ராக்டர் தற்கொலை
/
தொழிலில் நஷ்டம் கான்ட்ராக்டர் தற்கொலை
ADDED : பிப் 08, 2025 05:59 AM
திருபுவனை: தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கான்ட்ராக்டர் தற்கொலை செய்து கொண்டார்.
திருபுவனை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சின்ராசு மகன் பாரதிராஜா, 39; இவருக்கு ராஜம் என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.
இவர், திருபுவனை தொழிற்பேட்டை பகுதி தனியார் நிறுவனங்களுக்கு, ஆட்களை சப்ளை செய்யும் காண்ட்ராக்டர் வேலை செய்து வந்துள்ளார்.
இதில், நஷ்டம் ஏற்பட்டதால், கடந்த சில மாதங்களாக அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 5ம் தேதி வீட்டில், சேலையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே இறந்தார்.
திருபுவனை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.