/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.4.39 லட்சம் இழப்பு
/
ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.4.39 லட்சம் இழப்பு
ADDED : ஆக 30, 2025 12:17 AM
புதுச்சேரி : பகுதிநேர வேலையாக ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்த நபர் ரூ.4.39 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளார்.
கரியமாணிக்கத்தை சேர்ந்த நபரை, டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என, ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய அவர் பல்வேறு தவணைகளாக மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ. 4 லட்சத்து 39 ஆயிரத்து 500 முதலீடு செய்துள்ளார். அதன் மூலம் வந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. அதன் பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
இதேபோல், முத்தியால்பேட்டையை சேர்ந்த பெண், குறைந்த வட்டிக்கு லோன் பெற விண்ணப்பித்து 27 ஆயிரம், வெங்கடா நகரை சேர்ந்த நபர் 56 ஆயிரத்து 500, அரியாங்குப்பத்தை சேர்ந்த நபர் 35 ஆயிரம், முத்தியால்பேட்டை சேர்ந்த ஆண் நபர் 29 ஆயிரத்த 632, சின்ன காலாப்பட்டை சேர்ந்த ஆண் நபர் 2 ஆயிரத்த 291 என, 6 பேர் மோசடி கும்பலிடம் 5 லட்சத்து 89 ஆயிரத்து 923 ரூபாய் ஏமாந்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

