sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லாட்டரி சீட்டு விற்பனை: 2 பேர் கைது 

லாட்டரி சீட்டு விற்பனை: 2 பேர் கைது 

லாட்டரி சீட்டு விற்பனை: 2 பேர் கைது 


ADDED : ஜூலை 07, 2025 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2025 01:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சோலை நகரில் மூன்று நம்பர் லாட்டரி விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

முத்தியால்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சோலை நகர் அரசு பெண்கள் பள்ளி அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர்.

அதில், தடை செய்யப்பட்ட கேரளா மாநிலத்தை சேர்ந்த மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது.

அவரிடம் நடத்த விசாரணையில் சோலை நகர், தனலட்சுமி கார்டனைச் சேர்ந்த தரணி (எ) பால்ராஜ், 49; என்பது தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் பேரில், முத்தியால்பேட்டை, அங்காளம்மன் நகரை சேர்ந்த மணிகண்டன், 30; என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, 2 பேரிடம் இருந்து 3 மொபைல் போன்கள், ரூ.20 ஆயிரம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின், கைது செய்யப்பட்ட இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us