தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதிய கட்சி துவக்கினார் லாட்டரி அதிபர் மகன்

 புதிய கட்சி துவக்கினார் லாட்டரி அதிபர் மகன்

 புதிய கட்சி துவக்கினார் லாட்டரி அதிபர் மகன்


ADDED : டிச 15, 2025 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2025 06:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில், 'லட்சிய ஜனநாயக கட்சி' என்ற புதிய கட்சியை, லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் துவக்கி உள்ளார்.

புதுச்சேரியில், ஜோஸ் சார்லஸ் தன் 'ஜே.சி.எம்., மக்கள் மன்றம்' வாயிலாக பல்வேறு நலப்பணிகள் மேற்கொண்டார்.

இந்நிலையில், புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு செய்து, லட்சிய ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சியை நேற்று புதுச்சேரியில் துவக்கினார்.

கட்சியின் துவக்க விழா மற்றும் கட்சி கொடி அறிமுக விழா, புதுச்சேரியில் நேற்று நடந்தது.

முன்னதாக, மணக்குள விநாயகர் கோவில், துாய ஜென்மராக்கினி அன்னை பேராலயம், ஹம்ரத் சையத் அஹமத் மவுலா சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஆகியவற்றில் ஜோஸ் சார்லஸ் வழிபட்டார்; பின், படகில் கடலுக்குள் சென்று, கொடியை ஏற்றி அறிமுகம் செய்தார்.

நீலம், வெள்ளை, சிவப்பு நிறக் கொடியில், கையில் வேலேந்திய சிங்கம், ஆறு நட்சத்திரங்கள் மற்றும் நெற்கதிருடன் எல்.ஜே.கே., என பொறிக்கப்பட்டுள்ளது.

கட்சிக் கொடியை ஜோஸ் சார்லஸ் அறிமுகம் செய்தபோது, கடலுக்குள் 64 படகுகள் எல்.ஜே.கே., என்ற வடிவத்தில் அணிவகுத்து நின்றன.

புதுச்சேரியில் ஊழல் இல்லாத ஆட்சியை அமைப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. கட்சி துவக்க விழாவில் ஜோஸ் சார்லஸ் குடும்பத்தினர், புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் அங்காளன், சிவசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கட்சியை துவக்கிய ஜோஸ் சா ர்லஸ், 'புதுச் சேரியை சிங்கப்பூராக மாற்றுவேன்' என தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us