
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உழவர்கரை புனித ஜெயராக்கினி மாதா கோவிலில் 310ம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு ஆடம்பர தேர் பவனி நடந்தது.
உழவர்கரை புனித ஜெயராக்கினி மாதா கோவில் 310ம் ஆண்டு பெருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலை 6:00 மணிக்கு திருப்பலி மற்றும் தேர்பவனி நடந்து வந்தது. நேற்று கூட்டு திருப்பலி நடந்தது. இதையொட்டி காலை 7:30 மணிக்கு பெருவிழா திருப்பலி நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடந்தது. திரளான கிறஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.