ADDED : ஏப் 18, 2026 10:56 PM
அ நிறம் | அளவு
வில்லியனுார்: வில்லியனுார் துாய லுார்து அன்னை ஆலய பெருவிழாவில் மாலை ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.
பெருவிழா கடந்த 11ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 9 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் காலை, மாலை சிறப்பு திருப்பலி, இரவு 7:00 மணிக்கு தேர் பவனி நடக்கிறது.
விழாவையொட்டி, ஏப்ரல் 19 அன்று காலை 7:30 மணிக்கு புதுச்சேரி - கடலுார் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி, மாலை 6:00 மணிக்கு வேலுார் மறைமாவட்ட ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து தலைமையில் சிறப்பு திருப்பலி, இரவு 7:30 மணிக்கு வைரகிரீடம் சூட்டப்பட்டு மாதா ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.
