தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மா.கம்யூ., மறியல் போராட்டம்

 மா.கம்யூ., மறியல் போராட்டம்

 மா.கம்யூ., மறியல் போராட்டம்


ADDED : மே 28, 2026 06:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 06:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மா.கம்யூ., பொதுச்செயலாளர் பேபி கைதை கண்டித்து புதுச்சேரி மா.கம்யூ., சார்பில், பஸ் நிலையம் எதிரில் சாலை மறியல் நடந்தது.

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில், அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தியதை கண்டித்து, டில்லியில் அறவழியில் போராட்டம் நடத்திய மா.கம்யூ., கட்சியின் பொதுச் செயலாளர் பேபியை டில்லி போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து, புதுச்சேரி மா.கம்யூ., சார்பில், நெல்லித்தோப்பு சந்திப்பு சுப்பையா சிலை அருகில் நேற்று மாலை சாலை மறியல் நடந்தது.

போராட்டத்திற்கு, அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மாநில செயலாளர் ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், சுதா, ராஜாங்கம், தமிழ்ச்செல்வன் கொளஞ்சியப்பன், சீனிவாசன், கலியமூர்த்தி சத்யா மற்றும் மாநில குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுப்பட்ட மா.கம்யூ., அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் மற்றும் 7 பெண்கள் உள்பட 47 பேரை போலீசார் கைது செய்து விடுவித்தனர். அதன்பின் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us